Payload Logo
சினிமா

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

Author

bala

Date Published

krishna tamil actor

சென்னை :கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்கழுகுப்பட நடிகரான கிருஷ்ணாவும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

பின்னர், அவர் இங்கே இல்லை என்றும், கேரளாவில் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளதாக குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கிருஷ்ணாவின் குடும்பத்தினர் மூலம் அவருக்கு இந்த தகவலை போலீசார் தெரிவித்த நிலையில், முதலில் விசாரணைக்கு வரவிருந்தார். அதன்பின், கிருஷ்ணா, விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட பிறகு தலைமறைவாக இருந்ததாகவும், அவரது செல்போனை அணைத்து வைத்திருந்ததால், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார் என்றும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து,  நடிகர் கிருஷ்ணாவும்  இந்த வழக்கில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்பட்டு, நுங்கம்பாக்கம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். விசாரணையின் போது, கிருஷ்ணா அளித்த வாக்குமூலத்தில், தான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்று மறுத்து அதற்கான காரணங்களையும் தெரிவித்துள்ளார்.

காவல் துறையில் அவர் கொடுத்த வாக்குமூலம் என்னவென்றால் " எனக்கு இரைப்பை அலர்ஜி இருப்பதால், போதைப் பொருள் பயன்படுத்துவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று கூறினார். அதைப்போல, இதயத்துடிப்பு வேகமாக இருப்பதால், அதற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதனால் போதைப் பொருள் உபயோகிக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், போதைப் பொருள் விநியோகத்தில் சிக்கிய பிரதீப் குமாருடன் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், நடிகர் ஸ்ரீகாந்துடன் மட்டுமே நட்பு ரீதியாக பழகியதாகவும் கூறினார்.

அதைப்போல, முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத்திடம் இருந்து போதைப் பொருள் வாங்கியதாக பிரதீப் குமார் தவறாக கூறியதாகவும், இது உண்மையல்ல என்றும் விளக்கினார். இந்த வாக்குமூலத்தை அடுத்து, கிருஷ்ணாவுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்தப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், அவர் மீது அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.