ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!
Author
bala
Date Published

லீட்ஸ் :இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 கேட்ச்களை தவறவிட்டதற்காக ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். ஜெய்ஸ்வாலின் இந்த குறைபாடு, இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் எடுக்கவும், 371 ரன்கள் இலக்கை துரத்துவதில் வலுவான தொடக்கத்தைப் பெறவும் காரணமாக அமைந்ததாக ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அவர் கேட்சை தவறவிட்ட வீடியோ தற்போது மிகவும் வைரலாகி கொண்டு இருக்கும் நிலையில், “ஸ்லிப், கல்லி, லாங் ஃபீல்டிங் எங்க நிறுத்துனாலும் கேட்ச் விட்டா, எங்க தான் உங்கள நிறுத்துறது?” என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஜெய்ஸ்வால், முக்கியமாக ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சில் பென் டக்கெட், ஒலி போப், ஹாரி ப்ரூக் ஆகியோரின் கேட்ச்களை தவறவிட்டார். இதில் ப்ரூக் 99 ரன்களில் ஆட்டமிழந்தபோது தவறவிட்ட கேட்ச் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளானது.
மேலும், மொஹம்மத் சிராஜின் பந்து வீச்சில் டக்கெட் 98 ரன்களில் இருந்தபோது தவறவிட்ட கேட்ச், அவரை சதம் அடிக்க வழிவகுத்தது. இந்த தவறுகள் இந்திய அணியை அழுத்தத்திற்கு உள்ளாக்கியதாகவும், பும்ராவின் 5 விக்கெட் (5/83) முயற்சியை பாழாக்கியதாகவும் ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் ஜெய்ஸ்வாலின் கேட்ச் தவறுதல்களால் வெளிப்படையாக விரக்தியை வெளிப்படுத்தினர். “ஜெய்ஸ்வாலை ஸ்லிப்பில் நிறுத்துவது மோசமான முடிவு, அவரை அந்த இடத்தில் இருந்து நீக்க வேண்டும்,” என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இருப்பினும், ஜெய்ஸ்வால் முதல் நாளில் 101 ரன்கள் (144 பந்துகள், 16 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) எடுத்து இந்தியாவுக்கு வலுவான தொடக்கத்தை அளித்தார், இது அவரது 5-வது டெஸ்ட் சதமாகும். ஆனால், அவரது புலித்தன்மை தவறுகள் இந்த சாதனையை மறைத்து, ரசிகர்களின் கோபத்தை திருப்பியுள்ளன. “பேட்டிங்கில் சதம் அடித்தாலும் பீல்டிங்கில் இப்படியா சொதப்புவது? என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
unknown node