இங்கிலாந்தில் எத்தனை சதம் வச்சிருக்க? சீண்டிய ஜானி பேர்ஸ்டோவ்...பதிலடி கொடுத்த கில்!
Author
bala
Date Published

லீட்ஸ் :இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய அணி முதல் நாளில் 359/3 என்ற வலுவான நிலையை எட்டியது. இந்தியா இந்த அளவுக்கு சிறப்பாக விளையாடி ரன்களை குவித்ததற்கான காரணமே ஜெய்ஷ்வால் மற்றும் கில் அடித்த சதம் தான். இவர்களுடைய அசத்தலான ஆட்டத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் இங்கிலாந்தில் எத்தனை சதம் வச்சிருக்க? என கில்லை பார்த்து ஜானி பேர்ஸ்டோவ் பேசியதற்கு இங்கிலாந்தில் சதம் விளாசி அவர் பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.ஏனென்றால், கடந்த 2024-ஆம் ஆண்டு தரம்ஸாலா டெஸ்டில் நடந்த சுப்மன் கில் மற்றும் ஜானி பேர்ஸ்டோவின் காரசாரமான வாக்குவாதத்தின் வீடியோ மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வாக்குவாதம், 2024 மார்ச் 9 அன்று, தரம்ஸாலாவில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது நடந்தது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 477 ரன்கள் குவித்து, இங்கிலாந்தை விட 259 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 103/5 என்ற நிலையில் தத்தளித்தபோது, ஜானி பேர்ஸ்டோ (39 ரன்கள், 31 பந்துகள், 3 சிக்ஸர்கள்) ஆக்ரோஷமாக ஆடிக்கொண்டிருந்தார். அப்போது, ஸ்லிப் கார்டனில் நின்ற சுப்மன் கில், பேர்ஸ்டோவை கிண்டல் செய்ய முயன்றார். இதற்கு பதிலளித்த பேர்ஸ்டோ, முதல் இன்னிங்ஸில் கில், ஜேம்ஸ் ஆண்டர்சனை ஓய்வு பெறச் சொன்னதாகக் குறிப்பிட்டு, “ஜிம்மியிடம் (ஆண்டர்சன்) ஓய்வு பெறச் சொன்னாயே, அடுத்த பந்திலேயே உன்னை வீழ்த்தினார், இல்லையா?” என்று கேட்டார்.
இதற்கு கில், “அதனால் என்ன? நான் 100 ரன்கள் எடுத்த பிறகுதான் அவர் என்னை வீழ்த்தினார். நீ இங்கு எத்தனை சதங்கள் அடித்திருக்கிறாய்?” என்று பதிலடி கொடுத்தார். பேர்ஸ்டோ, “நீ இங்கிலாந்தில் எத்தனை சதங்கள் அடித்திருக்கிறாய்?” என்று கேட்க, இந்த வாக்குவாதத்தில் சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜுரலும் இணைந்தனர். சர்ஃபராஸ், “தோடா சா ரன் க்யா பனா லியா, ஜ்யாதா உச்சல் ரஹா ஹை (சீரிஸில் கொஞ்சம் ரன்கள் எடுத்துவிட்டு, இவன் ரொம்ப துள்ளுறான்),” என்று மும்பை பாணியில் கிண்டலாகக் கூறினார். இந்த உரையாடல் ஸ்டம்ப் மைக் மூலம் பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவியது.
மீண்டும் வைரலாக முக்கியமான 2025 ஜூன் 20-ல் தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், கில் இங்கிலாந்து மண்ணில் தனது முதல் சதத்தை (127*) அடித்ததால் தான். எனவே, அவருடைய சதத்தின் மூலம் “நீ இங்கிலாந்தில் எத்தனை சதங்கள் அடித்திருக்கிறாய்?” என்ற கேள்விக்கு கில் பதிலடி கொடுத்ததாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
unknown node