Payload Logo
தமிழ்நாடு

நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! அடுத்த 2 நாளுக்கு ரெட் அலர்ட்!

Author

bala

Date Published

rain news tn school levu

நீலகிரி :தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை வெளுத்துவாங்கி கொண்டு இருக்கிறது. இப்படியான சூழலில், நாளை ஜூன் 14-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, மக்கள் அவசியமின்றி வெளியே செல்லாமல் இருக்கவும், மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், சுற்றுலாப் பயணிகள் நீலகிரி செல்லும் திட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதே சமயம், நீலகிரி மாவட்டத்தில் 14,15 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை வெளியிட்டு இருந்தது. அதன்படி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும்,கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

15-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. எனவே, ஏற்கனவே, நீலகிரியில் மழை வெளுத்து வாங்கி வருவதாலும் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட காரணத்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை நாளை விடுக்கப்பட்டுள்ளது.