"ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகுதான் இந்து மதம் வந்தது" - விசிக தலைவர் திருமாவளவன்.!
Author
gowtham
Date Published

சென்னை :விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா, நேற்றிரவு கலைவாணர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "அணு ஆயுதங்களால் தகர்க்க முடியாத ஒன்று, இந்தியாவில் சாதிய கட்டமைப்புகளாக உள்ளது. முருகன் தமிழ் கடவுள் என்றால் சிவனும், பார்வதியும் தமிழ் கடவுள் தான.. கணேசன் மட்டும் ஏன் தமிழ் கடவுளாக இல்லை..?" இதை கேட்டால் அவர்களுக்கு கோவம் வருகிறது.
இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது, ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு இந்து மதம் வந்தது. பிற மதங்களில் சகோதரத்துவம் உள்ளது, இந்து மதம் அடிப்படையிலேயே பாகுபாடு கொண்டது. அணு ஆயுதங்களால் கூட தகர்க்க முடியாதது இந்தியாவில் உள்ள சாதிய கட்டமைப்பு.
திருநீறை அழித்து விட்டதாக ஆத்திரப்படும் நீ மேல்பாதி கோவிலின் கருவறைக்குள் என்னை அழைத்துச் செல்லத் தயாரா? இந்து மதத்தில் சகோதரத்துவம் இருக்கிறதா? புண்ணியம் கிடைக்கும் என நான் பூசிக் கொள்ளவில்லை. அவமதிக்கும் நோக்கில் அதை அழிக்கவும் இல்லை என்னை சங்கராச்சாரியராக்க வேண்டாம், சகோதரனான ஏற்றுக்கொள்ளத்தான் சொல்கிறேன்.
மதச்சார்பின்மைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். - பாஜக செயல்படுவதால் அது கூர்மைப்படுகிறது. மதச்சார்பின்மை கூர்மைப்படக் காரணமான ஆர்.எஸ்.எஸ். - பாஜகவுக்கு நன்றி. தேர்தல் கட்சி என்ற வகையில் பாஜகவை எதிர்க்கவில்லை, அவர்களின் அரசியலை எதிர்க்கிறோம். நாட்டில் அமையும் அரசு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும், பாஜகவோ அரசமைப்பை எறிய நினைக்கிறது. நாம் கொடியேற்ற, பேனர் கட்ட, பொதுக்கூட்டங்களை நடத்த போராட வேண்டியுள்ளது.
தமிழ்நாடு அரசியலை நாம் கூர்மைப்படுத்துகிறோம், சனாதன சக்திகள் தமிழ்நாடு மண்ணை நஞ்சாக்க விடமாட்டோம். சனாதன சக்திகளா? விடுதலை சிறுத்தைகளா? என்பதுதான் தமிழ்நாட்டு பாலிடிக்ஸ், தமிழ்நாட்டு அரசியலை மதவாத அரசியலை நோக்கி மடைமாற்றம் செய்ய பலர் முயற்சி.
எங்கள் இயக்கம் சட்டமன்ற, நாடாளுமன்ற சீட்டு பேரம் பேசுவதற்கு அல்ல. ஒருநாள் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றுகூட நான் அறிவித்துவிடுவேன் இருக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை, பிளாஸ்டிக் சேர், தரையில்கூட அமருவேன்" என்று ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டி அடுக்கடுக்காய் பேசினார்.