ஆர்சிபி வெற்றி விழாவை நடத்தியது கர்நாடக அரசா? கிரிக்கெட் வாரியமா? - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.!
Author
gowtham
Date Published

கர்நாடகா :பெங்களூரு ஆர்.சி.பி. வெற்றிக்கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, கர்நாடக நீதிமன்ற நீதிபதி சார்பில், ''இவ்வளவு கூட்டம் வரும் போது முறையான நெறிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் அல்லவா?காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டதா? விதான் சவுதா மற்றும் சின்னச்சாமி மைதானம் என ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்?
மாநில அரசு சார்பில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? என கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பட்டது. இந்த கேள்விகளுக்கு விரிவான பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு வரும் 10ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில அரசு பதில் அளித்தது.
மேலும், கர்நாடக அரசு தரப்பில் அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டதால் எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் வந்தது. 50,000ல் இருந்து 60 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேர் வருகை தந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.