தனுஷின் 'குபேரா' எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
Author
gowtham
Date Published

சென்னை :இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா' இறுதியாக, இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தனுஷ் தவிர நடிகர்கள் நாகர்ஜுனா, ரஷ்மிகா என பலர் நடித்துள்ள இந்த படத்தை ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் நடிகர் தனுஷ் தனது மகனுடன் சென்னை ரோகிணி தியேட்டரில் சைலண்டாக கண்டு மகிழ்ந்தார்.
unknown nodeசமூக ஏற்றத்தாழ்வுகளை ஆழமாக, பணக்காரரான நாகார்ஜுனாவையும், பிச்சைக்காரரான தனுஷையும் வைத்து கூறியுள்ளது 'குபேரா' படம். இயக்குநர் சேகர் கம்முலா 2-ம் பாதியில் எமோஷனலான காட்சிகளை மிக சிறப்பாக கையாண்டுள்ளார்.
வெளிமாநிலங்களில் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாகவே பதிவிட்டு வருகின்றனர். மேலும் ட்விட்டரில் படத்திற்கான முதற்கட்ட விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இப்படம் பார்வையாளர்களைக் கவர்ந்ததா? தனுஷ் நடித்த படத்திற்கான ட்விட்டரில் முதல் விமர்சனங்களைப் பார்ப்போம்.
''குபேரா'' படத்தின் முதல் பாதி நேர்த்தியாகவும், 2-ம் பாதி எமோஷனலாக இருப்பதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். தனுஷ், நாகர்ஜுனாவின் நடிப்பையும் பாராட்டும் ரசிகர்கள், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையும் கவர்ந்ததாக மெச்சுகின்றனர். டைரக்டர் சேகர் கம்முலாவின் திரைக்கதை மற்றும் இயக்கம் பல இடங்களில் க்ளாப்ஸ் பெற்றதாகவும் தெரிவிக்கின்றனர்.
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node