Payload Logo
முக்கியச் செய்திகள்

அவசர அவசரமாக சாலையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.! கார் மீது மோதியதால் பரபரப்பு..,

Author

gowtham

Date Published

helicopter - emergency

ருத்ரபிரயாக் :உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள செர்சி பராசு அருகே உள்ள சாலையில் கேதார்நாத் தாமுக்கு நான்கு பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த கிரிஸ்டல் ஏவியேஷன் நிறுவனத்தின் ஹெலிகாப்டர், நடு ரோட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அப்போது, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் சேதமடைந்தது, ஆனால் அதில் யாரும் இல்லை. மேலும், ஹெலிகாப்டரில் ஐந்து பயணிகள் இருந்தனர், அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். இருப்பினும், விமானிக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.

உத்தரகண்ட் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் (UCADA) இந்த சம்பவத்தைக் கவனத்தில் கொண்டு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) தகவல் அளித்துள்ளது. பின்னர் இந்த சம்பவம் குறித்து சட்டம் மற்றும் ஒழுங்கு துணை இயக்குநர் டாக்டர் வி. முருகேசன், ''குப்த்காஷியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்க வேண்டியிருந்தது என்று கூறினார்.

unknown node