Payload Logo
வானிலை

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

Author

gowtham

Date Published

Valparai - School Holiday

கோவை :தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியாக இருப்பதால், மழையின் தாக்கம் இங்கு அதிகமாக உள்ளது.  ஏற்கனவே, நேற்றும் இன்றும் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாணவர்கள் நலன்கருதி, வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் வெளியிட்டுள்ளார்.இந்த அறிவிப்பு கல்லூரிகளுக்கு பொருந்தாது, பள்ளிகளுக்கு மட்டுமே இந்த விடுமுறை உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.