நீலகிரியில் வெளுத்து ஊத்தும் கனமழை! இந்த இடங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
Author
bala
Date Published

சென்னை :நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக உதகை, குந்தா, கூடலூர், மற்றும் பந்தலூ ஆகிய இடங்களில் தற்போது வரை கனமழை பெய்துகொண்டு இருக்கிறது. இப்படியான நிலையில், இன்று நீலகிரி மாவட்டத்தின் உதகை, குந்தா, கூடலூர், மற்றும் பந்தலூ ஆகிய இடங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே,நீலகிரி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக ஜூன் 14, 2025 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஜூன் 13, 2025 அன்று தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை உத்தரவிடப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து இன்று மொத்தமாக விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று ஜூன் 15-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் , கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.