Payload Logo
வானிலை

கேரளா மழை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

Author

gowtham

Date Published

kerala rain scl

திருவனந்தபுரம் :கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. அடுத்த சில நாட்களில் அதிக மழை, பலத்த காற்று மற்றும் திடீர் வெள்ள அபாயம் ஏற்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பல பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளன.

அதன்படி, எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா, திருச்சூர், பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய 7 மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதே நேரம், பாலக்காட்டில், பள்ளிகள், பயிற்சி மையங்கள் மற்றும் அங்கன்வாடிகள் மூடப்படும், ஆனால் தொழில்முறை கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று நாட்களுக்கு கேரளா முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்யும் என்றும், அதனுடன் பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று (ஜூன் 27 ஆம் தேதி) இடுக்கி, மலப்புரம் மற்றும் வயநாட்டிற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். மேலும், ஜூன் 29 வரை பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.