ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை கொடுத்திருக்கலாம்! தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!
Author
bala
Date Published

சென்னை :கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் தான் குற்றவாளி என கடந்த மே 28-ஆம் தேதி சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதால் அவரை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்ததோடு அவருக்கு வழங்கப்படும் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 11 பிரிவுகளில் குற்றச்சாட்டு நிரூபணமான நிலையில்எனவே, இந்த வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் "ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும்" என காட்டத்துடன் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் " ஞானசேகரன் வாழ்நாளில் இளமை காலத்தையும், வாழும் காலத்தையும் சிறையில் கழிக்கவேண்டிய சூழ்நிலை வந்திருக்கிறது. இந்த தீர்ப்பு என்பது வரவேற்க தக்கது தான். ஆனால், சாதாரணமாக நீங்கள் பெண்களிடம் இதை சொன்னால் பெண்கள் மீது குற்றச்சாட்டு வந்தால் தூக்கில் போடுங்கள் என்று சொல்வது தான் வழக்கம் சாதாரண மக்கள் இதைத்தான் சொல்வார்கள்.
இப்போது இந்த வழக்கில் 30 வருடங்கள் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டிருப்பது நீண்ட காலமான ஒரு நல்ல தீர்ப்பு தான். யாராக இருந்தாலும் நிச்சயமாக தப்பிக்க கூடாது ஆனால் ஞானசேகருக்கு 30 ஆண்டுகள்.. கூடவே உதவி செய்தவர்கள் யார் யார் அந்த சார் யார்? இவரின் குற்றத்திற்கு பின்புலம் என்ன இவருக்கு உதவியாளர்கள் யார் தனியாக வந்து மட்டுமே இவர் அந்த குற்றத்தை செய்தாரா அல்லது வேறு யாரும் இருக்கிறார்களா என்பதெல்லாம் கேள்விகளாக எழுந்து இருக்கிறது.
யார் இந்த சார் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஆனால் இந்த மாதிரி குற்றவாளிகளுக்கு எல்லாம் உச்சபட்ச தண்டனை கிடைக்க வேண்டும். சாகும் வரை ஆயுள் தண்டனை..இல்லை என்றால் தூக்கு தண்டனை கொடுத்திருக்கலாம் இப்போது நான் ஒரு அம்மாவிடம் பேசினேன். அவரும் அதைத்தான் சொன்னார். ஆகவே பெண்களே தங்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உச்சபட்ச தண்டனை சாகும் வரை ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் அதைத்தான் நானும் சொல்கிறேன்" எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.