Payload Logo
இந்தியா

மகளை பார்க்க சென்ற குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபாணி...விமான விபத்தில் பலி!

Author

bala

Date Published

plane crash VijayRupani

குஜராத் :அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள கோடா கேம்ப் மற்றும் ஐ.ஜி.பி. காம்பவுண்ட் அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியா கொடுத்த தகவலின் படி, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் செல்லும் AI171 விமானம் இன்று புறப்பட்ட பிறகு விபத்தில் சிக்கியதை  உறுதிப்படுத்தியிருந்தது.

மொத்தமாக 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர் எனவும் இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டவர்கள் எனவும் விளக்கம் அளித்திருந்தது. இன்னும் எத்தனை பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்...எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பதற்கான எந்த விவரமும் வெளியாகவில்லை.

அதே சமயம், இந்த விமானத்தில் , குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி விமானத்தில் பயணித்ததாக டிவி9 குஜராத்தி செய்தி நிறுவனம் தகவலை வெளியிட்டு இருந்தது. அதைப்போல, அவர் விமானத்தில் பயணம் செய்ய எடுத்த டிக்கெட் விவரப்பட்டியலில் அவருடைய பெயரும் இருந்தது.  எனவே, முன்னதாக அவர் விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் சென்றிருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவர் உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி அவருடைய குடும்பத்தினைரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

லண்டனில் இருக்கும் தன்னுடைய மகளை பார்க்க ஆசையாக அவர் விமானத்தில் சென்ற நிலையில் விபத்து சம்பவம் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் பரவி கொண்டு இருக்கிறது. இருப்பினும் இவர் இறப்பு செய்தி குறித்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இவருடைய இறப்பு மட்டுமில்லை இன்னும் எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்கிற விவரமும் அறிவிக்கப்படவில்லை. எனவே உண்மை என்னவென்று தெரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருந்தவேண்டும். ஆனால், விபத்தான இந்த விமானத்தில் விஜய் ரூபாணி பயணம் செய்தது அவர் எடுத்த டிக்கெட் மற்றும் விமானத்தில் அவர் இருந்த புகைப்படம் வைரலாகி அவர் பயணம் செய்ததை உறுதிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node