விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி?
Author
bala
Date Published

அகமதாபாத் :விமான நிலையத்திற்கு அருகே நடந்த எயர் இந்தியா விமான விபத்தில், குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி விமானத்தில் பயணித்ததாக டிவி9 குஜராத்தி அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் சமூக வலைத்தளங்களில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான அகமதாபாத் விமானத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இருந்ததை ஏர் இந்தியா டிக்கெட் உறுதிப்படுத்துகிறது என செய்திகள் பரவி கொண்டு இருக்கிறது.
unknown nodeமேலும், விபத்துக்குள்ளான விமானம் (AI171), அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்டு, பிற்பகல் 1:10 மணிக்கு திட்டமிடப்பட்டு, 1:38 மணிக்கு புறப்பட்டு, இரண்டு நிமிடங்களில், அதாவது 1:40 மணிக்கு மேகனிநகர் பகுதியில் உள்ள கோடா கேம்ப் மற்றும் ஐ.ஜி.பி. காம்பவுண்ட் அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான இந்த விமானம் ஒரு போயிங் 787-8 ட்ரீம்லைனர் (பதிவு எண் VT-ANB) ஆகும், இதில் 242 பயணிகள், உட்பட 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் இருந்ததாக மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் இன்னும் எத்தனை பேர் உயிரிழந்தனர்...எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்கிற தகவல் வெளியாகவில்லை.
இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா வெளியிட்ட பதிவில் “விமானம் AI171, அகமதாபாத்-லண்டன் காட்விக், இன்று (ஜூன் 12, 2025) ஒரு சம்பவத்தில் சிக்கியது. தற்போது விவரங்களை ஆராய்ந்து வருகிறோம். விரைவில் முழு விவரத்தை தெரிவிப்போம்" என கூறியுள்ளது.