Payload Logo
உலகம்

காசாவில் உணவு நெருக்கடி : 5 ரூபாய் பார்லே ஜி இவ்வளவு விலையா?

Author

bala

Date Published

gaza parle g

காசா :இஸ்ரேல்-ஹமாஸ் போரால் பாதிக்கப்பட்ட காஸாவில் உணவுப் பற்றாக்குறை மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்தியாவில் ரூ.5 மதிப்புள்ள பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் சுமார் ரூ.2,500 (24 யூரோ) என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதாக ஒரு துயரமான செய்தி வெளியாகியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய 2023 அக்டோபர் முதல், காஸாவில் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு வாழும் மக்கள் அன்றாட உணவு தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.

போரின் காரணமாக இஸ்ரேல் எல்லைகளை மூடியதால், 2025 மார்ச் முதல் மே வரை உதவி டிரக்குகள் காஸாவிற்குள் நுழைய முடியவில்லை. இதனால், உணவுப் பொருட்களின் விலை கறுப்புச் சந்தையில் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், காஸாவில் உள்ள 21 லட்சம் மக்கள் பெரும்பாலும் ஒரு வேளை உணவுடன் வாழ்கின்றனர், மேலும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது.

இப்படியான சோகமான சூழலில், இந்தியாவில் 5 ரூபாய்க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் (சுமார் 20 கிராம்) காஸாவில் 2,500 ரூபாய்க்கு (24 யூரோ) விற்கப்படுகிறது என்கிற தகவல் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முகமது ஜவாத் என்ற காஸா குடிமகன், தனது மகள் ரஃபிஃபின் விருப்பமான பார்லே-ஜி பிஸ்கட்டை வாங்குவதற்காக 2,500 ரூபாய் செலவிட்டதாக சமூக ஊடகமான X-இல் பதிவிட்டார். இந்த பதிவு வைரலாகி, உலகளவில் காஸாவின் உணவு நெருக்கடி குறித்து விவாதத்தை தூண்டியது.

முகமது ஜவாத்தின் X பதிவின்படி, இந்தியாவிலிருந்து இலவச மனிதாபிமான உதவியாக வந்த பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட்டுகள் காஸாவின் கறுப்புச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்டன. இஸ்ரேலின் எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் முற்றுகையால், 2025 மார்ச் முதல் மே வரை உதவி டிரக்குகள் காஸாவிற்குள் நுழைய முடியவில்லை.

எனவே, இதன் காரணமாக இதனால் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கறுப்புச் சந்தையில் பல மடங்கு உயர்ந்தன. ஜவாத், இந்த பிஸ்கட் விலையை உதாரணமாகக் காட்டி, ஒரு கிலோ மாவு 500 டாலருக்கும், சர்க்கரை 90 டாலருக்கும் விற்கப்படுவதாக குற்றச்சாட்டினை முன் வைத்தார். இஸ்ரேலின் எல்லைக் கட்டுப்பாடுகளும் இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணமாக உள்ளன. இந்த பதிவு, காஸாவில் உதவி பொருட்கள் முறையாக மக்களுக்கு சென்றடையவில்லை என்ற பிரச்சனையை உலகின் கவனத்திற்கு கொண்டுவந்தது.

unknown nodeunknown node