Payload Logo
உலகம்

மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே விழுந்த ஈரான் குண்டுகள்..., 5 பேர் படுகாயம்.!

Author

gowtham

Date Published

Iran -Israel -Microsoft

இஸ்ரேல்: ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக, இஸ்ரேலில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனை நேற்று ஈரான் தாக்குதலில் பாதிக்கப்பட்டது.

தற்பொழுது, பீர்ஷெபாவில் உள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலகத்தை ஈரானிய ஏவுகணை தாக்கியதால், அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. செயற்கை நுண்ணறிவு மற்றும் ஏவுகணை கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் மைக்ரோசாப்ட் இஸ்ரேலிய இராணுவத்துடன் இணைந்து செயல்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை இஸ்ரேலிய நகரமான பீர்ஷெபாவை ஈரான் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்கியுள்ளது. தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் அறிக்கையின்படி, 'ஈரானின் ஏவுகணை மைக்ரோசாப்ட் அலுவலகம் அருகே விழுந்தது. இதனால் பல கார்கள் தீப்பிடித்தன, அருகிலுள்ள வீடுகளும் சேதமடைந்தன. குறிப்பாக, இந்த தாக்குதலில் இதில் 6 பேர் காயமடைந்தனர் என்றம் தகவல் தெரிவித்துள்ளது.

unknown node

பீர்ஷேபா நகரம் ஈரானின் ஏவுகணைகளால் தாக்கப்படுவது இது இரண்டாவது நாளாகும். நேற்றைய தினம் (வியாழக்கிழமை) பீர்ஷெபாவில் உள்ள ஒரு மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணையை வீசியது. இதில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதற்கிடையில், 7 நாள் போரில் இதுவரை 24 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையில், வாஷிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் குழு ஒன்று, ஈரானில் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 639 ஐ எட்டியுள்ளதாகவும், 1329 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.