Payload Logo
சினிமா

என்னது..!! தக் லைஃப் படத்தில் ‘முத்தமழை’ பாடல் இல்லையா? ரசிகர்கள் ஏமாற்றம்.!

Author

gowtham

Date Published

thug life muthamalai

சென்னை :இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் கர்நாடக மாநிலம் தவிர உலகம் முழுவதும் இன்று வெளியானது. மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் 37 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ள 'தக் லைஃப்' திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் ஒளிபரப்ப அரசு சிறப்பு அனுமதியை அளித்துள்ளது. இந்த நிலையில், படம் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முதல் பாதி சுமாராக உள்ளது எனவும் சிம்பு ஆக்சனில் பிரித்தெடுக்கிறார் எனவும் கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டுள்ளன. நாயகன் லுக்கில் வரும் கமலுக்கு நன்றாக டி ஏஜிங் செய்துள்ளார்கள் என பாராட்டுகின்றனர். சிம்பு, த்ரிஷாவின் நடிப்பு ரசிக்கும் வகையிலிருந்தாலும், கமல்ஹாசனின் டயலாக் சில இடங்களில் ரசிக்கும்படி இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்கையில், சென்னையில் நடந்த ‘தக் லைஃப்' இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய 'முத்தமழை' என்ற பாடல் இணையத்தில் வைரலானது. படத்தில் பாடகி தீ குரலில் இப்பாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திரையரங்குகளில் வெளியான ‘தக் லைஃப்' படத்தைப் பார்த்தவர்கள் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் ‘முத்தமழை' பாடலே படத்தில் இடம்பெறவில்லை. இது குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

unknown nodeunknown nodeunknown node