#FactCheck : நாளை பொதுவிடுமுறை என பிரதமர் மோடி அறிவிப்பா? விளக்கம் கொடுத்த அரசு!
Author
bala
Date Published

சென்னை :அடிக்கடி சமூக வலைத்தளங்களில் எதாவது வதந்தியான செய்திகள் பரவுகிறது என்றாலே அதனை சரிபார்த்து உண்மையா இல்லையா என அரசின் தகவல் சரிப்பார்ப்பகம் (TN Fact Check) விளக்கம் அளித்துவிடும். அப்படி தான் இப்போது பிரதமர் மோடி நாளை பொதுவிடுமுறை விடுவதாக அறிவிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து அது வதந்தி என விளக்கம் அளித்துள்ளது.
நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை (06.06.2025) தேசிய பொது விடுமுறையை அறிவித்து இருப்பதால் அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்கள். வங்கிகள் செயல்படாது என அறிவித்ததாக செய்தி தீயாக பரவியது. இது உண்மையா இல்லையா என பொதுமக்கள் குழப்பத்தில் இருந்த நிலையில் தமிழக அரசின் தகவல் சரிப்பார்ப்பகம் (TN Fact Check) விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து தகவல் சரிப்பார்ப்பகம் (TN Fact Check) அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பரவி வரும் இணையதள செய்தி செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டதாகும். இது போன்ற எந்த அறிவிப்பையும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையும் வெள்ளிக்கிழமை (06.06.2025) அன்று பள்ளிகளும் செயல்படும் என்று தெரிவித்துள்ளது.
unknown node