Payload Logo
தமிழ்நாடு

"இபிஎஸ் தான் முதலமைச்சர்.., தவெகவை NDAவுக்குள் கொண்டுவர முயற்சி" - ராஜேந்திரபாலாஜி.!

Author

gowtham

Date Published

AIADMK - BJP

சென்னை :2026 தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று அமித்ஷா கூறியது பேசுபொருளாகியுள்ளது. முதல்வராக இபிஎஸ் வருவார், அதிமுகவே ஆட்சியமைக்கும் என்று அதிமுக திரும்ப திரும்ப கூறி வருகிறது. ஆனால் அமித்ஷாவோ, இபிஎஸ் முதல்வராக வருவார் என்று கூறாமல், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது, கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது, புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ' NDA கூட்டணியை பொறுத்தவரையில் இபிஎஸ் தான் முதலமைச்சர்' என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய அவர், ''தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான், அவர் சொல்வதே இறுதி முடிவு, கூட்டணி குறித்த எந்த முடிவு என்றாலும் அது எடப்பாடி பழனிசாமிதான் அறிவிக்க வேண்டும்.  அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று அமித்ஷா கூறியது எடப்பாடியாரை தான் இருக்கும்'' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ''தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறது, வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது. த.வெ.க.-வை கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது, எனவே கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள்'' என்றும் கூறியுள்ளார்.