''அதிபர் டிரம்ப் குறித்த அந்த பதிவுகளுக்காக வருந்துகிறேன்'' - எலான் மஸ்க் போட்ட ட்வீட்.!!
Author
gowtham
Date Published

வாஷிங்டன் :அமெரிக் அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு, தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. அதாவது, ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த மஸ்க், ட்ரம்பை கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு பதிலடியாக ட்ரம்பும் மஸ்க்கை கடுமையாக விமர்சித்ததால், இருவருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது. இதனை தொடர்ந்து, மஸ்க்குடனான உறவு முற்றிலும் முறிந்துவிட்டதாகவும், இனி அவருடன் பேச விரும்பவில்லை என்றும் ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்தார்.
இதனிடையே, கடும் மோதலுக்கு பின், ‘தி அமெரிக்கன் பார்ட்டி’ என்கிற கட்சியை தொடங்கியுள்ளதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்தார். இவ்வாறு இருவருக்கிடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், தற்பொழுது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட சில பதிவுகளுக்கு வருத்தம் தெரிவிப்பதாக எலோன் மஸ்க் இன்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, எலோன் மஸ்க் தனது எக்ஸ் தள பதிவில், "கடந்த வாரம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பற்றிய எனது சில பதிவுகளுக்கு நான் வருந்துகிறேன். அவை மிகைப்படுத்தின" என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeஇதற்கு அமெரிக் அதிபர் டொனால்ட் டிரம்ப் செவி சாய்ப்பாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.