டோனால்ட் டிரம்ப் உடன் மோதல்...புதிய கட்சி தொடங்கிய எலான் மஸ்க்!
Author
bala
Date Published

வாஷிங்டன் :அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல், அரசியல் மற்றும் வணிக உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் மாறி மாறி வார்த்தை போரில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட முக்கியமான காரணமே ட்ரம்ப் கொண்டு வந்த "One Big Beautiful Bill"என்ற பொருளாதார மசோதா தான்.
டிரம்ப் இந்த மசோதாவை கொண்டுவந்தவுடனே இந்த மசோதாவில் பெரிய அளவிலான வரிக் குறைப்புகள் இருந்தன, ஆனால் இதனால் நாட்டின் கடன் அதிகரிக்கும் என மஸ்க் எச்சரித்தார். எனவே, அதற்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு பக்கம் டிரம்ப் பேச மீண்டும் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எலான் மஸ்க் பேச இவர்களுடைய வார்த்தை போர் என்பது ட்ரென்டிங் டாப்பிடிக்காகவும் மாறியுள்ளது.
இப்படியான சூழலில், மஸ்க் நேற்று காலை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அமெரிக்காவில் “நடுத்தர 80% மக்களை” உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்த ஒரு புதிய அரசியல் கட்சி தேவையா? இதை ஒரு கருத்துக்கணிப்பாக (poll) பதிவு போட்டார். அந்த பதிவை பார்த்த இந்த கருத்துக்கணிப்பில் 80% பேர் “ஆமாம், புதிய கட்சி தேவை”னு வாக்கு அளித்தார்கள். பிறகு இதைப் பார்த்து மஸ்க், “மக்கள் தங்கள் கருத்தை சொல்லிட்டாங்க! நடுத்தர 80% மக்களை பிரதிநிதித்துவப்படுத்த புது கட்சி வேண்டும் என கூறினார்.
அதன் பின் ஒரு பயனர் “அமெரிக்கா கட்சி” (The America Party)னு பெயர் பரிந்துரைச்சார். மஸ்க்குக்கு இந்தப் பெயர் மிகவும் பிடித்திருந்த நிலையில், “இந்தப் பெயர் நல்லா இருக்கு! உண்மையாவே அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்று பதில் அளித்தார். எனவே, அரசியல் கட்சியை மஸ்க் தொடங்கப்போகிறாரா? என்கிற கேள்வியும் எழுந்திருந்தது. அந்த கேள்வியை உறுதிப்படுத்தும் வகையில் புதிய கட்சியை தான் தொடங்கியதாக மஸ்க் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் போட்டுள்ள பதிவில் பேசுகையில் " அமெரிக்காவில் தற்போதைய சூழலில் புதிய கட்சி தொடங்கலாமா என்று கருத்துக்கணிப்பு நடத்தினேன். அந்த கருத்து கணிப்பில் அப்போது நடுத்தர மக்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு புதிய அரசியல் கட்சி தேவை என்று 80 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எனது கட்சியின் பெயர் 'தி அமெரிக்கன் பார்ட்டி' என்று தற்போது அறிவிக்கிறேன். உண்மையிலேயே அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக இது இருக்கும்" எனவும் உறுதியளித்தார்.
unknown node