“எப்ஸ்டீன் ஃபைல்களில் ட்ரம்ப் உள்ளார்” என பதிவிட்டதை நீக்கினார் எலான் மஸ்க்.!
Author
gowtham
Date Published

வாசிங்டன் :அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல், அரசியல் மற்றும் வணிக உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் மிகப்பெரிய வெடிகுண்டைத் தூக்கிப் போட வேண்டிய நேரம் வந்துவிட்டது. டொனால்ட் டிரம்ப் எப்ஸ்டீன் கோப்புகளில் இருக்கிறார். அதனால்தான் அதை வெளியிட மறுக்கிறார். உண்மை ஒருநாள் வெளிவரும் என்று எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
சிறார்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் கைது செய்யப்பட்டு 2019ம் ஆண்டு சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தவர் பிரபல நிதியாளரான ஜெஃப்ரி எப்ஸ்டீன். அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களில் எப்ஸ்டீனின் 'கஸ்டமர்கள்' பட்டியல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த கடும் வார்த்தை மோதலுக்கு மத்தியில், எலோன் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் கோப்புகளில் பெயர் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டிய தனது எக்ஸ் பதிவை நீக்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தி பைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாளின் அறிக்கையின்படி, டிரம்ப் மற்றும் மஸ்க்கின் கூட்டாளிகள், இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலை குறைக்க முயற்சிப்பதாகவும், அவர்களின் உறவை சரிசெய்ய இருவரையும் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அந்தப் பதிவு நீக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
அமெரிக்காவில் புதிய கட்சி உதயமாவதற்கு 80% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். முன்னதாக, அமெரிக்காவின் 80% மிடில் கிளாஸ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய கட்சி தொடங்க இது சரியான நேரமா? என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் poll நடத்தினார். அதற்கு 80% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து “அமெரிக்கா கட்சி” (The America Party) என்று அவர் பதிவிட்டுள்ளார். இதனால், புதிய அரசியல் கட்சியை மஸ்க் தொடங்கப்போகிறாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.