கோவையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.!
Author
gowtham
Date Published

கோவை :2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7, 2025) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் தொடங்குகிறார். இந்த சுற்றுப்பயணத்தில், அவர் தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களைச் சந்திக்க உள்ளார். முதற்கட்டமாக, இன்று மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளிலும், ஜூலை 8-ஆம் தேதி கோவை தெற்கு மற்றும் வடக்கு தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், திமுக ஆட்சியின் குறைகளை மக்களிடம் எடுத்துரைப்பதும், தமிழ்நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவருவதுமாகும். இந்த பயணத்தின்போது, இபிஎஸ் உடன் புகைப்படம் எடுப்பவர்கள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், குற்றப் பின்னணி உள்ளவர்கள் யாரையும் அவருடன் போட்டோ எடுக்க விட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை தவிர்க்க அதிமுக இந்த புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது. இந்த சுற்றுப்பயணம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைகிறது. திமுக அரசின் குறைபாடுகளை மக்களிடம் வெளிப்படுத்துவதுடன், அதிமுகவின் கொள்கைகளையும், மக்களுக்கு செய்ய உள்ள திட்டங்களையும் எடுத்துரைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.