Payload Logo
தமிழ்நாடு

திமுகவை பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு வயித்தெரிச்சல்! முதல்வர் ஸ்டாலின் சாடல்!

Author

bala

Date Published

edappadi palanisamy mk stalin

சென்னை :இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூருக்கு சென்று ரூ.1,194 கோடியிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். திறந்து வைத்துவிட்டு நிகழ்ச்சியில் பேசிய அவர் காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்டியது திமுக எனவும், எடப்பாடி பழனிசாமி  உண்மை என்னவென்று தெரிந்துகொள்ளாமல் அறிக்கை விடுவதாகவும் விமர்சித்து பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் " காவிரி நீரை பெறுவதற்காக பல நடவடிக்கைகளை எடுத்தவர் என்றால் கருணாநிதி தான். எனவே, கருணாநிதியையும், தஞ்சையையும் எப்போதுமே பிரித்து பார்க்க முடியாது.கலைஞர் கருணாநிதி வழியில் நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வில் தஞ்சை வந்துள்ளேன். காவிரி ஆணையம் அமைக்க காரணமானவர் கலைஞர் கருணாநிதி. ஒருங்கிணைந்த தஞ்சை மண்ணின் மைந்தர் கலைஞர் கருணாநிதி" எனவும் பேசினார்.

அதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி குறித்து அவர் பேசுகையில் " திமுக அரசு இப்போது வெளிப்படைத்தன்மையாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. ஆனால், இது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை. ஒண்ணுமே தெரியாமல் எப்போது பெட்டியில் சாவி துழந்துவிட்டதா என்கிறதை மட்டும் தான் கேட்கிறார். அவருடைய கவனம் முழுவதும் பெட்டியில் தான் இருக்கிறது. அதைப்போல, கூட்டணி பிரச்சினைகளை மறக்க வைப்பதற்காக அரைவேக்காடுதனமாக அறிக்கை வெளியீட்டு கொண்டு இருக்கிறார்.

திமுக அரசின் திட்டங்களால் மக்கள் பயன்பெறுவதை பார்த்து எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நியூஸ் பேப்பரை படிக்காத எடப்பாடி பழனிசாமிக்கு நான் இந்த நேரத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அது என்னவென்றால், கடந்த ஜூன் 13-ஆம் தேதி பத்திரிகை ஒன்றில் முதல்வரிடம் மனு அழுத்த 30 நிமிடத்தில் ஆக்சன் என எழுதியிருந்தார்கள்.

நான் பள்ளி மாணவர்கள் என்னிடம் வைத்த கழிவறை மற்றும் சுற்று சுவர் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக எழுதியிருந்தார்கள். இது தான் திமுவவின் செயல்பாடு.  எனவே, மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் நாங்கள் செயல்பட்டால் எதிர்க்கட்சி தலைவராக இருக்க கூடிய எடப்பாடி பழனிசாமிக்கு வயிறு ஏரியத்தானே  செய்யும்?" எனவும் மு.க.ஸ்டாலின் பேசினார்.