Payload Logo
தமிழ்நாடு

ஜூன் 11-14 வரை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

Author

gowtham

Date Published

DMDK District Secretaries Meeting

சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், ஜூன் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தேமுதிக மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பார்கள். சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரையும் கூட்டம் நடைபெறுகிறது.

பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், 2026 தேர்தல் கூட்டணி, சார்பு அணி நிர்வாகிகள், பூத் ஏஜெண்டுகள் தேர்வு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாம்.

இக்கூட்டத்தில் குறிப்பாக அதிமுக உடனான தற்போதைய கூட்டணி நிலை குறித்து பிரேமலதா பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, NDA கூட்டணியில் இணைய தேமுதிகவுக்கு பாஜக தூது அனுப்பியதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.