Payload Logo
சினிமா

“ஐபிஎல் பைனல் முடிவு என்னவாக இருந்தாலும் மனவேதனை தான்” - இயக்குநர் ராஜமௌலி.!

Author

gowtham

Date Published

rcb punjab - rajamouli

சென்னை :நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் ஃபைனலுக்குள் நுழைந்துள்ளது. அதேநேரம், மும்பை அணி தொடரில் இருந்து வெளியேறியது. அதிரடியாக விளையாடிய ஸ்ரேயஷ் ஐயர் சிக்ஸர்களை பறக்கவிட்டு அணிக்கு வலுசேர்த்தார்.

அவ்வப்போது முக்கிய விக்கெட்டுகளும் பறிபோயின. இந்நிலையில், நாளை நடைபெறும் ஃபைனலில் பஞ்சாப், பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஒரு உணர்ச்சிபூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார். ராஜமௌலியின் இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த இரு அணிகளுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்எஸ் ராஜமௌலி, ஸ்ரேயாஸ் மற்றும் விராட் இருவரின் செயல்திறனுக்காக இருவரையும் பாராட்டியுள்ளார். இது குறித்து தனது பதிவில், ''ஷ்ரேயஸ் ஐயர் டெல்லி அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார், கொல்கத்தா அணியை கோப்பை வெல்ல வைத்தார். இரு தருணங்களிலும் அணிகள் அவரை கைவிட்டன.

தற்போது பஞ்சாப் அணியை 11 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்தாண்டும் கோப்பை வெல்ல ஷ்ரேயஸ் தகுதி வாய்ந்தவர். மற்றொரு புறம், விராட் கோலி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடுகிறார். ஆயிரக்கணக்கான ரன்களை குவித்துள்ளார். அவரும் இறுதிப்போட்டியில் உள்ளார். கோலியும் கோப்பை வெல்ல தகுதி வாய்ந்தவரே. முடிவு என்னவாக இருந்தாலும். அது மனவேதனை தருவதாக இருக்கப் போகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.நாளைய பைனல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் இறுதிப் போட்டியில் மோத உள்ளன.

unknown node