Payload Logo
இந்தியா

தண்ணீர் கலந்த டீசல்...நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

Author

bala

Date Published

madhya pradesh cm car

மத்தியப் பிரதேசம் :மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில் நின்று போனது. இதற்கு முக்கிய காரணமே, டீசலுக்கு பதிலாக தண்ணீர் கலந்த எரிபொருள் நிரப்பப்பட்டதால் ஏற்பட்ட பிரச்சனையால் தான். மொத்தம் 19 வாகனங்கள் நின்றது. இதில் மாநிலத்தின் முதலமைச்சரின் முதலமைச்சர் மோகன் யாதவின் காரும் அடங்கும்.

ரத்லம் பகுதியில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில் டீசல் நிரப்பப்பட்ட பின்னர், வாகனங்கள் சில கிலோமீட்டர்கள் சென்றவுடன் ஸ்டாப் ஆகி நின்றது. அப்போது தான், தண்ணீர் கலந்த டீசல் பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டது. இது உள்ளூர் நிர்வாகத்தின் அலட்சியத்தையும், எரிபொருள் தரத்தில் ஊழல் சம்பவங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு காரணமான எரிபொருள் நிலைய உரிமையாளர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மோகன் யாதவ், இது ஒரு தீவிரமான பிரச்சனை என்று கூறி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும், அந்த பங்கிற்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு, மத்தியப் பிரதேசத்தில் எரிபொருள் விநியோகத்தில் தரக்கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வையின் பற்றாக்குறையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதனால், மாநில அரசு எரிபொருள் நிலையங்களில் தர ஆய்வை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது.