நாயகனை மிஞ்சியதா "தக் லைஃப்"! நெட்டிசன்கள் சொல்லும் விமர்சனங்கள் என்ன?
Author
bala
Date Published

சென்னை :நாயகன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி தக்லைஃப் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கிட்டத்தட்ட 32 -வருடங்களுக்கு பிறகு இவர்களுடைய கூட்டணி இணைந்துள்ள காரணத்தால் இந்த படத்தின் மீது மிகபெரிய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருந்தது. அத்துடன் படத்தில் சிம்புவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் எதிர்பார்ப்பு எங்கையோ சென்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.
படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க படத்தை கமல்ஹாசன் தீவிரமாக ப்ரோமோஷன் செய்தும் வந்தார். இன்னும் கொஞ்சம் ஒரு படி மேல் சென்று தக்லைஃப் படத்தை பார்த்தால் நிச்சயமாக நாயகன் படத்தை மறந்துவிடுவீர்கள் என்பது போல கூறி படத்தின் ஹைப்பை வேற லெவலுக்கு கொண்டுசென்றுவிட்டார். எனவே, ஆவலுடன் படத்தை பார்க்க காத்திருந்த நிலையில் படம் இன்று மிகபெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.
படத்தை பார்த்த பலரும் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். அவர்களுடைய விமர்சனங்கள் பற்றி பார்க்கையில் படம் எதிர்பார்த்த அளவுக்கு விமர்சனங்களை பெறவில்லை. சுமாரான வரவேற்பை தான் பெற்றுக்கொண்டு வருகிறது.
படத்தை பார்த்த ஓருவர் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் "தக்லைஃப் திரைப்படம் ஒரு அருமையான படம், நல்ல கதைக்களம் மற்றும் சிறந்த திரைக்கதை.மணிரத்னம் இயக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது அதைப்போல, கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆக்டிங் சூப்பர் மொத்தத்தில் தக்லைஃப் படம் சூப்பராக இருக்கிறது படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள்" என கூறியுள்ளார்.
unknown nodeமற்றொருவர் " தக்லைஃப் ஒரு சலிப்பூட்டும் கேங்ஸ்டர் நாடகம், ஆரம்ப கட்டத்தில் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தது, ஆனால் அதன் பிறகு முற்றிலும் சரிந்துவிடுகிறது. சில சுவாரஸ்யமான பகுதிகள் மற்றும் அமைப்பு காரணமாக முதல் பாதி ஓரளவு பார்க்கக்கூடியதாகவே உள்ளது. இருப்பினும், இரண்டாம் பாதி ஆரம்பம் முதல் முடிவு வரை முற்றிலும் முட்டாள்தனமாக உள்ளது. மணிரத்னம் இந்தக் கதையைத் தொடங்கிய விதத்தில் ஒரு சிறிய தீப்பொறியைக் காட்டினார், ஆனால் கதை வலிமிகுந்த மெதுவாகவும் இருந்தது" எனவும் கூறியுள்ளார்.
unknown nodeமற்றொருவர் " தக்லைப் மிகவும் சராசரி, படத்தின் கதை கணிக்கக்கூடியது, கதை இல்லை, மணி சாரின் புதுமை இல்லை, கமல்ஹாசன் நடிப்பு அருமையாக இருந்தது. நிறைய ஸ்கோப் அனைத்தும் வீணாகிவிட்டது. வழக்கம் போல் #arrahman இன் அனைத்து பாடல்களும் வீணாகிவிட்டன" எனவும் கூறியுள்ளார்.
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node