Payload Logo
இந்தியா

கூட்ட நெரிசல் விவகாரம்: எச்சரிக்கையை மீறி கொண்டாட்டம்.., இறுதியில் நடந்த விபரீதம்.!

Author

gowtham

Date Published

Cricket craze in Bengaluru

கர்நாடகா :ஐபிஎல்-லில் வெற்றி பெட்ரா ஆர்.சி.பி அணி, வெற்றியின் கொண்டாத்தின்போது நேற்றைய தினம் நடந்த சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆர்சிபி, நிகழ்வு மேலாண்மை நிறுவனமான டிஎன்ஏ பொழுதுபோக்கு நெட்வொர்க்குகள், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் உட்பட இன்னும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செயப்பட்டுள்ளது.

அதாவது, பிஎன்எஸ் பிரிவு 105, பிரிவு 25 (12), பிரிவு 142, பிரிவு 121 மற்றும் பிரிவு 190 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செயப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது, பெங்களூரு கூட்ட நெரிசல் தொடர்பாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, ஞாயிற்று கிழமை விடுமுறை நாள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை திட்டமிடவும், போக்குவரத்தை சரி செய்யவும் போதுமான நேரம் கிடைக்கும் என்பதால் அன்று விழா நடத்த போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாம். ஆனால், அரசு தரப்பு அதை நிராகரித்து போட்டி முடிந்த மறுநாளே அவசர அவசரமாக விழாவிற்கு ஏற்பாடு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றம் இன்று தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. கர்நாடகா உயர் நீதிமன்றம், விதான் சவுதா மற்றும் சின்னச்சாமி மைதானம் என ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்? அரசு சார்பில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?என அடுக்கடுக்காய் கேள்விகளை எழுப்பியது.

இதையடுத்து, விசாரணை நடத்த தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என மாநில அரசு சார்பில் விளக்கம் அளித்திருந்த நிலையில், இந்த வழக்கை சி.ஐ.டி. (C.I.D) விசாரணைக்கு மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.