Payload Logo
இந்தியா

விராட் கோலி கைகளில் கர்நாடகா கொடி.., பிரம்மாண்ட வரவேற்பு அளித்த துணை முதல்வர் டி.கே சிவகுமார்.!

Author

gowtham

Date Published

DK Shivakumar - Virat Kohli

பெங்களூரு :ஐபிஎல்லில் முதல் முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக விராட் கோலியின் 18 ஆண்டுகால கனவு நனவானது ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்கவிட்டுள்ளது. இந்நிலையில், குஜராத்தில் இருந்து பெங்களூரு திரும்பிய ஆர்சிபி வீரர்களுக்கு ரசிகர்கள் குதூகலத்துடன் வரவேற்பு அளித்தனர்.

ஈ சாலா கப் நம்தே என்பது இந்த ஆண்டு நிஜமாகிவிட்டது எனக் கூறி அவர்கள் பூரிப்படைந்தனர். அகமதாபாத்தில் இருந்து பெங்களூரு வந்தடைந்த ஐபிஎல் சாம்பியன்ஸ் ஆர்சிபி அணியை விமான நிலையத்தில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் வரவேற்றார்.

இன்னும் சற்று நேரத்தில் பெங்களூரு விதான் சௌதாவுக்கு வெளியே முதலமைச்சர் சித்தராமையா, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் கொண்டாட்ட நிகழ்வு நடைபெறவுள்ளது.

unknown node