"இனி அரசு விடுதிகளில் பெண் காவலாளிகளை நியமிக்க முடிவு” - அமைச்சர் கீதா ஜீவன்
Author
bala
Date Published

சென்னை :தாம்பரம் பகுதியில் உள்ள அரசு விடுதியில் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வரும் 13-வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் இரண்டு கால்களும் உடைக்கப்பட்டு உடல்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த சம்பவத்தில் முதற்கட்டமாக விடுதியில் காவலாளியாக பணியாற்றி வந்த மேத்யூ கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, அரசு சேவை இல்லங்களில் பெண் காவலாளிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் உறுதியளித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் " பாதிக்கப்பட்ட மாணவி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காலையில் அவருக்கு ஆப்ரேசன் முடிந்தது நானும் காலையில் சென்று மாணவியையும் அவருடைய பெற்றோர்களையும் பார்த்து கொண்டு தான் வருகிறேன்.
அவர்கள் என்னிடம் வைத்த கோரிக்கை என்னவென்றால் குழந்தையின் பெயர் மற்றும் ஊர் எதுவும் வெளியே தெரியவேண்டாம். யூடியூபில் வரும் செய்திகளில் பார்த்தோம் ஊர் பெயர் சொல்கிறார்கள். தயவு செய்து அது மட்டும் வராதது போல பார்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார். எனவே, மீடியாவில் யாரும் எந்த விவரத்தையும் கூறவேண்டாம் இது சட்டப்படி குற்றம்..எனவே விவரம் எதுவும் வெளியே தெரியவேண்டாம் என பத்திரிகையாளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்" எனவும் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில் " சிசிடிவி காட்சிகளின் அடிப்படை வைத்து கைது செய்யப்பட்டவரை குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களுக்கு எதிராக எழும் குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு. எனவே, அவருடைய உத்தரவின் படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறார். அப்படி தான் இந்த சம்பவத்திலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளி என காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
வார்டன் விடுமுறையில் இருந்த சமயத்தில் இந்த குற்றச் சம்பவம் நடந்துள்ளது. மாணவி தைரியமாக அடையாளம் காட்டியதால் காவலாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அரசு விடுதியில் ஏற்கனவே 8 சிசிடிவி கேமராக்கள் உள்ளது. இன்னும் சில கேமராக்களும் பொருத்தலாம். அதே சமயம் அரசு சேவை இல்லங்களில் பெண் காவலாளிகளை நியமிக்க உள்ளோம் இந்த முடிவை தான் நாங்கள் எடுத்திருக்கிறோம்" எனவும் கீதா ஜீவன் தெரிவித்தார்.