கொரோனா பரவல்: ''கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய வேண்டும்'' - பொது சுகாதாரத்துறை.!
Author
gowtham
Date Published

சென்னை :சிங்கப்பூர், ஹாங்காங்கில் பரவி வந்த கொரோனா தற்போது இந்தியாவிலும் வேகமெடுக்கிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 498 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதித்த 5364 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று மட்டும் இந்தியாவில் கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழந்தனர், இதனால் பலி எண்ணிக்கை 51 ஆனது. தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் மட்டும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு, 221 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பொது சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி உள்ளிட்டவை இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும்.
வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அவசியம். முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லாவிட்டாலும் பாதுகாப்பிற்காக கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.