திருப்பூரில் பரபரப்பு: இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை.!
Author
gowtham
Date Published

திருப்பூர் :இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த நிலையில், திருப்பூர் குமாரானந்தபுரம் காமராஜர் வீதியில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த தாக்குதல் திடீரென நடந்ததாகவும், முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலையின் முழு பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், காவல் துறையினர் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
அண்மைக் காலமாக தமிழகத்தில் அரசியல் மற்றும் அமைப்பு பிரமுகர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. அண்மையில், திருவண்ணாமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.