Payload Logo
தமிழ்நாடு

"தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்" முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Author

bala

Date Published

kalaignar birthday

சென்னை :தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவராகவும் பணியாற்றிய கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த நாளானது இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கலைஞர் ஒரு சிறந்த அரசியல் தலைவர் மட்டுமல்லாமல், தமிழ் இலக்கியத்திலும், திரைப்படத்துறையிலும் மிகப் பெரும் பங்களிப்பு செய்தவர். அவரது எழுத்துக்கள், உரைகள் மற்றும் திரைக்கதைகள் தமிழ் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

முறை முதல்வராக இருந்த கலைஞர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ,சமூக நீதி மற்றும் தமிழர் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடினார். எனவே, ஆண்டுதோறும் ஜூன் 3 அவரது பிறந்தநாள் அவரது பங்களிப்புகளை நினைவுகூரும் ஒரு நாளாக கொண்டாடப்படுகிறது. அப்படி தான் இந்த முறையும் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள் பலரும் கலைஞர் குறித்து பதிவுகளை வெளியிட்டு நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது " தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்! முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள்!

ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து - இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்" எனவும் கூறியுள்ளார்.

unknown node