திருவாரூரில் மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு.!
Author
gowtham
Date Published

திருவாரூர் :தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட பகுதிகளை வழங்குவது வழக்கம். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 9, 2025) மற்றும் நாளை (ஜூலை 10, 2025) கள ஆய்வு மேற்கொள்கிறார். அப்பொழுது, பல புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். அதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் திருவாரூரில் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச் சிலையை திறந்து வைக்க உள்ளார். இந்த ஆய்வின் போது, அவர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு திட்டங்களையும், மக்களின் குறைகளையும் ஆய்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதல்வரின் வருகையை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட திமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க தயாராகி வருகின்றனர். மு.க.ஸ்டாலின் இந்த கள ஆய்வு பணி, "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம், இதன் மூலம் மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அரசு திட்டங்களின் செயல்பாடுகளை உறுதி செய்யும் நோக்கம் உள்ளது. குறிப்பாக, முதலமைச்சரின் இந்த வருகையையொட்டி, திருவாரூரில் ட்ரோன் கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.