Payload Logo
தமிழ்நாடு

குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

Author

gowtham

Date Published

MKStalin - kallanai

தஞ்சாவூர் :கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி மாற்றப்பட்டது. அதன்படி, இன்று (ஜூன் 15) மாலை அந்த அணையை தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலின் திறந்தார்.

மேட்டூர் அணை ஜூன் 12 இல் திறக்கப்பட்டால், கல்லணையை ஜூன் 16 இல் திறப்பது வழக்கம். அதன்படி திறக்க முடிவு செய்பப்பட்ட நிலையில், விரைவான நீர் வரத்து இருப்பதால், கல்லணைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலையே தண்ணீர் வந்துவிடும் எனவே, இன்று மாலை 5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை சாகுபடிக்காக  கல்லணையில் இருந்து பாசனத்திற்காக நீரை திறந்து வைத்த முதல் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றார் மு.க.ஸ்டாலின்.

இது காவிரி ஆற்றின் நீரைப் பயன்படுத்தி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் குறுவை பயிர்ச்சாகுபடிக்கு பயன்படுத்தப்படுகிறது. கல்லணை, உலகின் மிகப் பழமையான நீர்ப்பாசன அணைகளில் ஒன்றாகும். இது காவிரி ஆற்றின் நீரை பல்வேறு கால்வாய்களுக்கு பிரித்து விவசாய நிலங்களுக்கு வழங்க உதவுகிறது.