Payload Logo
தமிழ்நாடு

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

Author

gowtham

Date Published

MK Stalin -TN Govt

திருப்பத்தூர் :தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில் முடிவுற்ற 90 திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார். மேலும், ரூ.68.76 கோடி மதிப்பீட்டில் 60 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, 1,00,168 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் விழா மேடையில் பேசி வரும் முதல்வர் ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.தொடர்ந்து பேசிய அவர், “காட்பாடிக்கு ரயிலில் வந்திறங்கியதில் இருந்து மக்களின் வரவேற்பில் மனம் நிறைந்துவிட்டது. வேலூரில் 5 மணிக்கு தொடங்கி, திருப்பத்தூருக்கு 11 மணிக்கு வந்து சேர்ந்தோம் திமுக தொண்டர்கள் வரவேற்போடு, பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் பொதுமக்கள் என பல தரப்பினரும் வரவேற்றனர்'' என நெகிழிச்சியுடன் தெரிவித்தார்.