Payload Logo
தமிழ்நாடு

''துணியைக் கட்டி மறைக்கும் பாஜக மாடல் அல்ல'' - முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Author

gowtham

Date Published

mk stalin madurai

சென்னை :நேற்றைய தினம் மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்றது. அதற்கு முன் தினமே மதுரை சென்ற முதல்வர், விமான நிலையத்தில் இருந்து பெருங்குடி, அவனியாபுரம், திருமலை நாயக்கர் சிலை வழியாக ஆரப்பாளையம் வரை சுமார் 17 கி.மீ. தொலைவுக்கு ரோடு ஷா நடத்தினார்.

இந்நிலையில், முதல்வர் வருகையை முன்னிட்டு, பந்தல்குடியில் 2 கி.மீ-க்கு தூர்வாரப்படாத கால்வாயை ஜமுக்காளம் போட்டு மறைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் இரவு நேரத்தில் அந்த இடத்திற்ககே மாலை சென்று, அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் பார்வையிட்டு, கால்வாயைத் தூய்மைப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார்.

தற்பொழுது, இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை வெளியுள்ளார். அதில், ''ரோடுஷோ வழியில் பந்தல்குடி எனுமிடத்தில் பகுதியை முதலமைச்சரான என் பார்வைக்குப் படாதபடி கால்வாயைத் துணியைக் கட்டி மறைத்திருக்கிறார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியாக, அது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனக் கருத்துகளும் பதிவான நிலையில், உடனே அதனை அகற்றச் சொன்னேன்.

அதுமட்டுமல்ல, அந்த இடத்திற்கு மாலை சென்றபோது, என் வாகனத்தை விட்டு இறங்கி, அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் பார்வையிட்டு, கால்வாயைத் தூய்மைப்படுத்தும் பணிகள் என்ன நிலையில் இருக்கின்றன என்ற விவரத்தையும் கேட்டு, அதனை விரைவுபடுத்தவும் உத்தரவிட்டேன்.

துணி மறைப்பு கட்டி, உண்மை நிலையை உலகத் தலைவர்களின் கண்களிலிருந்து மறைக்கும் பா.ஜ.க. மாடல் இதுவல்ல, இது திராவிட மாடல். மறைப்பை அகற்றி, மறைக்கப்படுவதைக் கண்டறிந்து, உடனடியாக முழுமையான தீர்வுக்கான வழி செய்யும் மாடல் என்பது பொதுமக்களுக்கு மட்டுமின்றி, கழகத்தை விமர்சிப்பதையே முழுநேர - பகுதிநேரத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களுக்கும் புரிந்திருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node