Payload Logo
தொழிநுட்பம்

ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வெழுதிய Chat GPT.! படிக்காமலேயே மார்க என்ன தெரியுமா.?

Author

gowtham

Date Published

chatgpt jee advanced mock test

மேற்கு வங்காளம் :OpenAI இன் ChatGPT நடைமுறைக்கு வந்ததிலிருந்தே தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது. இப்போது ChatGPT இன் புதிய மாடல், நாட்டின் கடினமான தேர்வில் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றதன் மூலம் விவாதத்தைத் தூண்டியுள்ளது.

உலகளவில் கடினமாக கருதப்படும் JEE ADVANCED தேர்வெழுதிய CHAT GPT 03. 360-க்கு 327 மதிப்பெண்கள் பெற்று, தேர்வில் அகில இந்திய அளவில் 4வது இடத்தைப் பிடித்தது. ஆம், இந்த மதிப்பெண், JEE Advanced தேர்வில் All India Rank (AIR) 4 என்ற மிக உயர்ந்த தரவரிசையைப் பெற போதுமானது.

கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) Advanced என்பது இந்தியாவில் உள்ள மிகவும் கடினமான பொறியியல் நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாகும். இது இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களான IIT-களில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான நுழைவாயிலாகும்.

அப்படி இருக்கையில், ஐஐடி காரக்பூரைச் சேர்ந்த பொறியாளரான அனுஷ்கா ஆஷ்வி என்பவர் இந்த சுவாரஸ்யமான சோதனையை மேற்கொண்டார். அதாவது, அவர் 2025 ஆம் ஆண்டு JEE Advanced மாதிரி தேர்வு (mock test) ஒன்றை ChatGPT o3 மூலம் வினாத்தாளை கொடுத்து சோதித்துள்ளார்.

குறிப்பாக அவர், ChatGPT o3-ஐ JEE தேர்வாளராக போல் செயல்படவும், இணையத் தேடல்கள், குறியீட்டு கருவிகள் அல்லது குறிப்புகள் இல்லாமல் ஒவ்வொரு கேள்வியையும் சுயாதீனமாகத் தீர்க்கவும் அறிவுறுத்தினார். அந்த ஆணையின்படி, Chat GPT தேர்வு எழுதியதை பார்த்து, பல ஆண்டுகளாக பயிற்சி செய்யும் மாணவர்களைப் போலவே விடைகளை எழுதுவதாக ஆச்சர்யமடைந்தனர்.

unknown node

முன்பு, 2023 ஆம் ஆண்டு GPT-4 என்ற அப்டேட், JEE Advanced தேர்வில் மோசமாக செயல்பட்டது. ஆனால், ChatGPT o3 இப்போது மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காட்டி, இந்தியாவின் மிகக் கடினமான தேர்வில் முதல் 5 இடங்களுக்குள் வந்தது. மேலும், இதன் மூலம் AI இவ்வளவு கடினமான தேர்வில் சிறந்து விளங்குவது, மாணவர்கள் படிப்பதற்கும், தேர்வுகளுக்கு தயாராவதற்கும் AI-ஐ பயன்படுத்தலாம் என்பதைக் காட்டுகிறது.