இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!
Author
bala
Date Published

சென்னை :டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு பருவமழை நாடு முழுதும் துவங்குவதற்கு சாதக சூழல் காணப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுதும் பருவமழை துவங்கிவிடும். வடக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேசம், மேற்கு வங்க கடற்கரையோர பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக சாதக சூழல் காணப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று (27/06/2025) அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 40.4°© வெப்பநிலை பதிவு. வெப்பநிலை!பகல் நேர வெப்பநிலை கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை 36 முதல் 38° செல்சியஸ் அளவிலும், உள் மாவட்டங்களில் 37 முதல் 39° செல்சியஸ் அளவிலும் காணப்படும்.
டெல்டா மாவட்டங்களான , கடலூர்,மயிலாடுதுறை காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும், ,புதுக்கோட்டை , சிவகங்கை, மதுரை ,திண்டுக்கல் போன்ற தென் மாவட்டங்களிலும், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுச்சேரி போன்ற பகுதிகளில் மாலை/இரவு இடி,மின்னலுடன் கூடிய கனமழை பதிவாகும் என தெரிவித்துள்ளார்.
அதே சமயம், சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவலின் படி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பள்ளது எனவும் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.