Payload Logo
இந்தியா

''ரூ.3,000க்கு வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ்'' - மத்திய அரசு அறிவிப்பு.!

Author

gowtham

Date Published

FASTag Pass

டெல்லி :நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் ஆகஸ்ட் 15, 2025 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

ஆண்டுக்கு ரூ.3,000 சுங்கக் கட்டண பாஸ் வழங்கும் நடைமுறை ஆகஸ்ட் 15இல் தொடக்கம், ரூ.3,000க்கு பாஸ் பெற்றால் ஓராண்டுக்கோ அல்லது 200 பயணங்களோ சுங்கக் கட்டணம் தனியாக செலுத்தாமல் பயணிக்கலாம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 15, 2025 முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருவதால், இதற்கான விண்ணப்ப முறைகள் மற்றும் கூடுதல் விவரங்களை NHAI மற்றும் MoRTH இணையதளங்களில் பெறலாம்.

unknown node