Payload Logo
உலகம்

“நான் தப்பியோடியவன் என்று சொல்லுங்க, ஆனால் நான் மோசடிக்காரன் அல்ல” - விஜய் மல்லையா.!

Author

gowtham

Date Published

Vijay Mallya

டெல்லி :வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள விஜய் மல்லையாவை ராஜ் ஷாமானி என்பவர் நேரடியாக சந்தித்து பேட்டி எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒன்பது வருடங்களாக ஊடகங்களில் இருந்து விலகி இருந்த மல்லையா, இந்த பேட்டியில் தன் தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் தனது வாழ்க்கை, வணிகம், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் சரிவு, ஊழியர்களின் நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் சட்டப் போராட்டங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசினார். அப்போது, நீங்கள் ஏன் இந்தியாவை விட்டு தப்பியோடினர்கள் என்ற என்று கேட்டதற்கு, பதிலளித்த தொழிலதிபர் விஜய் மல்லையா, "மார்ச் 2, 2016 அன்று, ஜெனீவாவில் நடந்த FIA கூட்டத்திற்காக நான் லண்டனுக்குச் சென்று கொண்டிருந்தேன். நான் அருண் ஜெட்லியிடம் சென்று தீர்வு பற்றிப் பேசுவேன் என்று சொன்னேன். பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டதால் நான் லண்டனில் சிக்கிக்கொண்டேன்.

மார்ச் 2016க்குப் பிறகு நான் இந்தியாவுக்கு திரும்பவில்லை, இதற்காக நீங்கள் என்னை தப்பியோடியவர் என்று கூறுங்கள். ஆனால், நான் ஓடிப்போகவில்லை, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணம் காரணமாக இந்தியாவிலிருந்து புறப்பட்டுச் சென்றேன். நான் இந்தியா திரும்பாததற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன, நீங்கள் என்னை தப்பியோடியவர் என்று அழைக்க விரும்பினால், அழையுங்கள். ஆனால், 'மோசடிக்காரன்' என்ற பதம் எனக்கு எப்படி பொருந்தும்?" என்றுகூறியிருக்கிறார்.

வங்கிகளின் கடன்கள் மற்றும் திருப்பிச் செலுத்தும் தொகை பற்றி  கேட்டதற்கு பதிலளித்த அவர், ''நான் 17 வங்கிகளில் இருந்து ரூ.6,203 கோடி கடன் வாங்கினேன். வங்கிகள் சொத்துக்களில் இருந்து ரூ.14,131.6 கோடியை மீட்டெடுத்தன, இது கடன் தொகையின் இரண்டரை மடங்கு அதிகம். 2012-2015 ஆம் ஆண்டில் நான் நான்கு முறை தீர்வு சலுகைகளை வழங்கினேன், அதில் ரூ.5,000 கோடி சலுகையும் அடங்கும், ஆனால் வங்கிகள் அதை நிராகரித்தன'' என்றார்.

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய அவர், ''பிராண்ட் மதிப்பீடு மற்றும் தனியார் ஜெட் விமானத்தை தவறாகப் பயன்படுத்தியதாக சிபிஐ குற்றம் சாட்டியது. ரூ.3,547 கோடி பணமோசடி செய்ததாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது. ஆனால் விமான நிறுவனத்தின் 50% செலவுகள் வெளிநாட்டு நாணயத்தில் இருந்தன, அதை பணமோசடி என்று சொல்வது முட்டாள்தனம். ஐடிபிஐக்கு ரூ.900 கோடி கடனையும் திருப்பிச் செலுத்தினேன்'' என்று என்றார்.

unknown node