Payload Logo
கிரிக்கெட்

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

Author

gowtham

Date Published

Jasprit Bumrah -Test Cricket

லீட்ஸ் :இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங் செய்த இந்திய அணி 471 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 465 ரன்கள் எடுத்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் வெறும் 6 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து அணி பின்னடைவில் உள்ளது.

இங்கிலாந்து அணிக்காக, ஒல்லி போப் 106 ரன்களும், ஹாரி புரூக் 99 ரன்களும் எடுத்தனர், இந்தியாவுக்காக, பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் பும்ரா, மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளார். அதாவது, வெளிநாட்டு மைதானங்களில் அதிக முறை 5 விக்கெட்கள் வீழ்த்திய கபில்தேவின் சாதனையையும் (12 முறை) அவர் சமன் செய்தார். மொத்தமாக 14 முறை அவர் 5 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

இதை தொடர்ந்து, இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸை நேற்றைய தினம் 3-வது நாளில் தொடங்கியது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம், நேற்றைய தினம் நடந்த போட்டியில் 96 ரன்கள் முன்னிலையில் 3-வது நாளை நிறைவு செய்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த ஜெய்ஸ்வால் 4 ரன்களிலேயே பெவிலியன் திரும்பினார். கடந்த இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டான சாய் சுதர்சன், இதில் 30 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். கே.எல் ராகுல், கில் களத்தில் உள்ளனர். தற்போது, இங்கிலாந்தை விட 96 ரன்கள் முன்னிலையில் இருந்தாலும் இன்றைய ஆட்டத்தில் விக்கெட்டை இழக்காமல் இந்தியா விளையாட வேண்டும். ராகுல்,கில் களத்தில் இருப்பது நம்பிக்கை அளிக்கிறது. ஒருவேளை விக்கெட்டை இழந்ததால், பண்ட், கருண் நாயர், ஜடேஜா சிறப்பாக விளையாடினால் வெற்றி உறுதியாகிவிவிடும்.