Payload Logo
உலகம்

வெடிகுண்டு மிரட்டல்: ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்.!

Author

gowtham

Date Published

airIndia -Tailand

பூக்கெத் :தாய்லாந்தில் இருந்து புது டெல்லிக்கு வரவிருந்த ஏர் இந்தியா விமானதிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து,  ஃபூகெட் விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர், பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இன்று காலை 9:30 மணிக்கு 156 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா AI379 விமானம் ஃபூகெட் விமான நிலையத்திலிருந்து புது டெல்லியை நோக்கி புறப்பட்டது. ஆனால், வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தாய்லாந்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், அவசரகால திட்டங்களின்படி, AI 379 விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், வெடிகுண்டு நிபுணர்களின் சோதனையில் ''ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை" என்று தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் உயிரிழந்த ஒரு நாள் கழித்து இந்த வெடி குண்டு மிரட்டல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், விஸ்வாஸ் குமார் ரமேஷ் மட்டுமே உயிர் பிழைத்தார், இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது.