Payload Logo
தமிழ்நாடு

நாளை முழுவதும் ஆட்டோ,பேருந்துகள் ஓடாது ஸ்ட்ரைக்! என்ன காரணம்?

Author

bala

Date Published

Auto, Bus Strike

சென்னை:நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தொமுச (LPF), ஐஎன்டியுசி (INTUC), சிஐடியு (CITU) உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றன. இதனால், பொது போக்குவரத்து சேவைகள் பெரிதும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலைநிறுத்தத்தில் அரசு அலுவலர்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்கவுள்ளனர். தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற முக்கிய நகரங்களில் பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கலாம். மக்களின் அன்றாட பயணங்களை பாதிக்கும் இந்த வேலைநிறுத்தத்திற்கு பொதுமக்கள் முன்கூட்டியே தயாராக வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மாற்று போக்குவரத்து வழிகளை பயன்படுத்த வேண்டியிருக்கும். தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருதல், பொதுத்துறை நிறுவனங்களின் தனியார் மயமாக்கலை நிறுத்துதல் ஆகியவை அடங்கும். மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய போதிலும், திருப்திகரமான முடிவுகள் எட்டப்படவில்லை என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதனால், இந்த வேலைநிறுத்தம் நாடு முழுவதும் பொது போக்குவரத்து மற்றும் பிற சேவைகளை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ்நாட்டில், திமுகவுடன் இணைந்த தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாமல் இருக்கலாம், இது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். இந்த வேலைநிறுத்தத்தின் தாக்கத்தை குறைக்க, மாநில அரசு கூடுதல் பேருந்து சேவைகளை இயக்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.