Payload Logo
கிரிக்கெட்

WTC இறுதிப் போட்டி: முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா.!

Author

gowtham

Date Published

AUSvsSA

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலின் முதல் நாள் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில், 56.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களை ஆஸ்திரேலியா அணி எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா முதலில் தடுமாறினாலும், ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்து நிதானமான ஆட்டத்தைக் கொடுத்து வந்தார்.

ஆனால், முதல் ஓவரின் கடைசி பந்திலேயே மிட்செல் ஸ்டார்க் பவுலிங்கில் மார்க்ரம் போல்ட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் இவ்வாறு அவுட்டானதால் தென் ஆப்பிரிக்க அணி நிதானமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக பியூ வெப்ஸ்டர் 72, ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்கள் எடுத்தனர், இருவரின் அரைசதங்கள் அடித்த நிலையில்,  அணியின் ஸ்கோர் 200 ரன்களைத் தாண்டியது. தென்னாப்பிரிக்கா அணிக்காக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்படி, ககிசோ ரபாடா கவாஜா, கேமரூன், வெப்ஸ்டர், கம்மின்ஸ், ஸ்டார்க் ஆகியோரின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிரடி காட்டினார். அவர் 15.4 ஓவர்களில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்தார். உணவு இடைவேளையின் போது, ​​ஆஸ்திரேலியா 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு முற்றிலும் சாதகமாக இருந்தது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பியூ வெப்ஸ்டர் ஆகிய இருவருக்கும் இடையே 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் இருந்தது.

இருவரும் அரைசதம் அடித்தனர். 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த பிறகு ஸ்மித் 112 பந்துகளில் 66 ரன்களையும், வெப்ஸ்டர் 92 பந்துகளில் 72 ரன்களையும் எடுத்தனர். இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி, தென் ஆப்பிரிக்கா அணியை திக்குமுக்காடச் செய்தது.

தனது முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் மட்டுமே எடுத்து. ஆஸ்திரேலியாவை விட 169 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஸ்டார்க், ஹேசில்வுட் பந்துவீச்சில் மிரட்டினர். நாளை இரண்டாம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு துவங்கும்.