Payload Logo
திரைப்பிரபலங்கள்

பரியேறும் பெருமாள் படத்தை மிஸ் செய்த அதர்வா! உண்மையை உடைத்த மாரி செல்வராஜ்!

Author

bala

Date Published

pariyerum perumal Mari Selvaraj

சென்னை :இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பல படங்கள் இன்று வரை ரசிகர்களுடைய பேவரைட் திரைப்படமாக இருந்து வருகிறது. அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் அவருடைய இயக்கத்தில் நடிகர் கதிர் நடிப்பில் வெளிவந்த பரியேறும் பெருமாள் படம் இன்று வரை பலருடைய பேவரைட் படமாக இருந்து வருகிறது. படத்தில் அவருடைய நடிப்பை பற்றியும் சொல்லியே தெரியவேண்டாம்.

ஆனால், இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் கதிர் இல்லயாம் அவருக்கு பதிலாக அதர்வா தான் நடிக்கவிருந்தாராம். இந்த தகவலை ‘டி என் ஏ’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் " இந்த நேரத்தில் நான் அதர்வாவிடம் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவருக்கு நான் சொல்ல போகும் விஷயம் நியாபகம் இருக்கா என்று தெரியவில்லை.

பரியேறும் பெருமாள் கதை சொன்ன முதல் ஹீரோ அவர்தான். நான் முரளி சாரோட பயங்கரமான ரசிகன். ஒரு தலை காதலுக்கு ஒரு கெத்தை உருவாக்கி கொடுத்தது அவர்தான். அவருடைய பையன் ஹீரோவா வருகிறார் என்றதும் அப்போது நான் எழுதி முடித்த பரியேறும் பெருமாள் பட கதையில் அவரை வைத்து நினைத்து பார்த்தேன். எனவே, அவரிடம் சென்று படத்தின் கதையை கூறினேன். ஆனால், அவரால் படத்தில் நடிக்க முடியவில்லை. அந்த சமயம் அவர் பிசியாக இருந்த காரணத்தால் படம் நடக்கவில்லை. எனக்கு இது மிகவும் வேதனையாக இருந்தது" எனவும்  மாரி செல்வராஜ் தெரிவித்தார்.அவரை தொடர்ந்து அதர்வா பேசுகையில் " நான் பார்த்த மிக சிறப்பான ஒரு படம் பரியேறும் பெருமாள். அந்தப் படத்தை மிஸ் செய்ததற்கு எந்த வருத்தமும் படவில்லை. காரணம், என்னை விட கதிர் அந்த கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார் ஒவ்வொரு படம் நடிக்கும் பொழுதும் எனக்கு ஒவ்வொரு விதமான அனுபவம் கிடைக்கும்" எனவும் பேசினார்.