Payload Logo
தமிழ்நாடு

தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக அருண்ராஜ் நியமனம்.!

Author

gowtham

Date Published

TVK - arunraj

சென்னை :தவெகவில் இன்று புதிதாக இணைந்த முன்னாள் IRS அதிகாரி அருண்ராஜ்-க்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கி அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், திமுக முன்னாள் MLA டேவிட் செல்வன், அதிமுக முன்னாள் MLA ராஜலட்சுமி, ஸ்ரீதரன் ஆகியோர் த.வெ.கவில் இணைந்தனர்.

இது தவிர ஓய்வு பெற்ற நீதிபதி சுபாஷ், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளைத் தலைவர் மரிய வில்சன் ஆகியோரும் இணைந்தனர். இவர்கள் கட்சியில் இணைந்தது குறித்து அக்கட்சியின் தவெக தலைவர் விஜய், தனது அறிக்கையின் வாயிலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

unknown node

தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை கடந்த மே 23ம் தேதி ராஜினாமா செய்தார். அதாவது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அறிவிக்கப்படாத அரசியல் ஆலோசகராக அருண்ராஜ் செயல்பட்டு வந்தார்.

இவர், தமிழ்நாட்டில் வருமான வரித்துறை அதிகாரியாக பனியாற்றிய போது, நடிகர் விஜய் மீது 2020-ல் நடந்த வருமான வரித்துறை சோதனையின் தலைமை அதிகாரியாக செயல்பட்டார். அப்போது முதல் தான் இவருக்கும் விஜய்க்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும், அப்போதே இருவரும் தங்களது எதிர்கால அரசியல் ஆசையை பரிமாறிக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.