ஏ.ஆர். ரஹ்மான் கான்செர்ட் - ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு.!
Author
gowtham
Date Published

சென்னை :இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய "மறக்குமா நெஞ்சம்" என்கிற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றை 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி சென்னை ஈசிஆரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம், நிகழ்ச்சி மழையால் ரத்து செய்யப்பட்டது.
பின்னர், செப்.10ம் தேதி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆகஸ்ட் மாதம் பெற்ற டிக்கெட்டுடன் வரலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த அர்ஜுன், இந்த நிகழ்ச்சிக்கு வாகன நிறுத்த வசதியுடன் சேர்த்து ரூ.10,000 மதிப்புள்ள டிக்கெட்டை வாங்கியிருந்தார். ஆனால், நிகழ்ச்சியை அவரால் காண முடியவில்லை.
இதற்கான காரணம் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், நிகழ்ச்சி ஏற்பாட்டில் ஏதோ குறைபாடு அல்லது மோசமான நிர்வாகம் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, டிக்கெட் வாங்கிய நபர், நிகழ்ச்சியைப் பார்க்க முடியாததால் ஏற்பட்ட இழப்பு மற்றும் அசௌகரியத்துக்கு இழப்பீடு கோரி, சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில், இந்த புகாரின் விசாரணைக்குப் பிறகு, நுகர்வோர் குறைதீர் ஆணையம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று முடிவு செய்தது. அதன்படி, புகார் அளித்தவருக்குரூ.50,000 இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவாக ரூ.5,000 வழங்க ஏசிடிசி நிறுவனத்திற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.