புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
Author
gowtham
Date Published

பாண்டிச்சேரி :புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. புதுச்சேரியில் புதிய நியமன எம்எல்ஏக்களாக பாஜகவைச் சேர்ந்த மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த நியமனத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, நியமன எம்எல்ஏக்களாக இருந்த ராமலிங்கம், வெங்கடேசன், மற்றும் அசோக்பாபு ஆகியோர் பாஜகவின் உத்தரவின்படி ராஜினாமா செய்திருந்தனர். புதிதாக நியமிக்கப்பட்ட இந்த மூவரும் ஜூலை 14ம் தேதி அன்று பகல் 12 மணிக்கு சபாநாயகர் செல்வம் முன்னிலையில் பதவியேற்க உள்ளனர்.
புதுச்சேரியில் தற்போது என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில், இந்த நியமனங்கள் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் தயாரிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.